Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பீர் வர்த்தகத்தில் களம் இறங்குகிறது எஸ்என்ஜே

சென்னை : சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வெளிநாட்டு மதுபான வகைகள் தயாரிப்பு நிறுவனமான எஸ்என்ஜே குழுமம், பீர் வர்த்தகத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, எஸ்என்ஜே குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் நிறுவனம், ஜெர்மனியை தலைமையிடமாகக் ‌கொண்டு செயல்படும் ஜீமான் குழுமத்தின் ஒரு அங்கமான ஜீமான் இந்தியாவுடன் இணைந்து ரூ. 150 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு அருகே புதிய யூனிட் அமைத்து வருவதாகவும், 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இங்கு உற்பத்தி முழுமையாக செயல்படத் துவங்கும் என்றும், இந்த புதிய யூனிட்டில், முதற்கட்டமாக 5,00,000 ஹெக்டோலிட்டர் பீர் உற்பத்தி செய்யப்பட இருப்பதாகவும், அடுத்த 2 ஆண்டுகளில் 2 மில்லியன் ஹெக்டோலிட்டர்களாக உற்பத்தி மேம்படுத்தப்பட இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மேம்பாட்டிற்காக, ரூ. 175 முதல் 180 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: