Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹுண்டாயின் புதிய 'ஐ10' கார் அறிமுகம்

சென்னை : ஹுண்டாய் மோட்டார் இந்திய நிறுவனத்தின் சார்பில் சென்னையில் புதிய தலைமுறைக்கான, ‘ஐ10’ கார் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.டபிள்யூ.பார்க் மற்றும் விற்பனை பிரிவு நிர்வாகி அரவிந்த் சக்சேனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளரான ஹுண்டாய் மோட்டார் இந்திய லிமிடெட் (எச்.எம்.ஐ.எல்.,) நிறுவனம், நேற்று தனது ப்ரீமியம் காம்பாக்ட் ‘ஐ10’ வரிசையில் முற்றிலும் புதிய மாடலான புதிய தலைமுறைக்கான ‘ஐ10’ காரை அறிமுகம் செய்துள்ளது.புதுமையான வடிவமைப்பிலான தோற்றம், தற்காலத்துக்கேற்ற ஏராளமான சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.கூடுதல் செயல் திறன் கொண்ட புதிய 1.1 ஐ.ஆர்.டி.இ., 2 இன்ஜின் பொருத்திய புதிய தலைமுறைக்கான ‘ஐ10’ கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.81 கி.மீ., மைலேஜ் தரக்கூடியது. இதற்கு ஏ.ஆர்.ஏ.ஐ., சான்றிதழ் உள்ளது. 1.2 காப்பா 2 வி.டி.வி.டி., இன்ஜின் பொருத்தப்பட்ட புதிய தலைமுறைக்கான ‘ஐ10’ கார் ஒரு லிட்டருக்கு 20.36 கி.மீ., மைலேஜ் கொடுக்கும்.காம்பேக்ட் கார் செக்மென்டில் மிக அதிக மைலேஜ் கொடுக்கும் கார் ஆகும். மேலும் பல வசதிகளும், புதுமைகளும் புதிய தலைமுறைக்கான ‘ஐ10’ல் உள்ளன.

Leave a Reply