“நான் மகான் அல்ல’, “வம்சம்’ படங்கள் எனக்கு முழு நேர நடிகர் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது என்கிறார் ஜெயபிரகாஷ்.
இது குறித்து அவர் கூறியது:
“பொற்காலம்’, “நெறஞ்ச மனசு’, “தவசி’, “ஏப்ரல் மாதத்தில்’, “ஜூலி கணபதி’ உள்ளிட்ட பல படங்களில் பங்கு தயாரிப்பாளராக இருந்தேன். சேரன்தான் “மாயக் கண்ணாடி’யில் நடிக்க அழைத்தார். கூச்சம் காரணமாக நடிப்பதைத் தவிர்த்தேன். சேரன் அன்பால் அதில் நடிக்க வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு “பசங்க’ படம் நல்ல அடையாளத்தைத் தந்தது. அதைத் தொடர்ந்து இப்போது “வம்சம்’, “நான் மகான் அல்ல’ ஆகிய இரு படங்களும் என்னை முழு நேர நடிகனாக்கி விட்டன. நிறைய படங்கள் இப்போது வந்திருக்கிறது. பிரபலமான இயக்குநர்களிடமிருந்து அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. கேரக்டரின் நீளம் உணர்ந்து நடிக்கிறேன். எந்த விதமான ஹோம் ஒர்க்கும் செய்வதில்லை. இயக்குநர்களின் தேவை உணர்ந்து நடிக்கிறேன். தயாரிப்பாளர் பணி ஒரு விதத்தில் கஷ்டம் என்றால், நடிகன் வேடம் அதைவிட கஷ்டமாக இருக்கிறது” என்கிறார் ஜெயபிரகாஷ்.
இயக்குநர்களின் நடிகன்தான்