Sunday, August 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உறுப்பினராகாதவர்கள் நடிப்பதை தடுக்க நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு

நடிகர் சங்கத்தில் நடிகர், நடிகைகள் உறுப்பினராக வேண்டும் என்று சங்கத்தின் பொதுக்குழுவில் ஏற்கனவே வற்புறுத்தப்பட்டது. உறுப்பினராகாதவர்கள் நடிப்பதற்கு தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது. இதற்கான கெடு தேதி முடிந்த பிறகும் பலர் உறுப்பினராகவில்லை.
இவர்களை நடிக்க அனுமதிக்க வேண்டாம் என தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்க வைக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்க நடிகர் சங்கம் புதிய நடவடிக்கையில் இறங்கி உள்ளது. படப்பிடிப்பு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சங்கத்தில் உறுப்பினர் ஆகாதவர்களை கண்டுபிடிப்பது என்றும் அவர்களிடம் படப்பிடிப்பு தளத்திலேயே விண்ணப்பங்கள் கொடுத்து கட்டாயப்படுத்தி உறுப்பினராக்குவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக நடிகர் சங்கம் சார்பில் 5 பேர் கொண்ட பல குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. சென்னையில் சரத்குமார் தலைமையில் நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. இக் கூட்டத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, நிர்வாகிகள் மனோரமா, சத்யராஜ், வாகை சந்திரசேகர், நளினி, சின்னி ஜெயந்த், கே.ராஜன், எஸ்.வி.சேகர், பூச்சி முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: