Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காரித்துப்பி விளம்பரம்

ரூர்:கரூர் வந்த காங்கிரஸ் சேவாதள மாநில அமைப்பாளரின் படம் இடம்பெற்ற பேனரில், “காரித்துப்பி’ வரவேற்பளித்து, எதிர் கோஷ்டியினர் புதிய வகையில் விளம்பரம் தேடினர் .கரூர் மாவட்ட சேவாதள தலைமை அமைப்பாளராக ஏ.செல்வராஜ் உட்பட புதிய நிர்வாகிகளை, மாநில சேவாதள அமைப்பாளர் கே.செல்வராஜ் நியமித்தார். இதற்கு ஏற்கனவே மாவட்ட முன்னாள் சேவாதள அமைப்பாளர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரூரில் நேற்று மாவட்ட சேவாதள நிர்வாகிகள் கூட்டம், புதிய நிர்வாகிகளுக்கு நியமன சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் சேவாதள மாநில அமைப்பாளர் செல்வராஜ் பங்கேற்க வந்தார்.செல்வராஜை கண்டித்து, கரூர் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா அருகில், ஒரு பேனரில், “அவரது படம் மற்றும் கண்டன வாசகம் எழுதி, காரித்துப்பி வரவேற்கிறோம்’ என எழுதி வைத்திருந்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் அந்த பேனர் முன், முன்னாள் சேவாதள அமைப்பாளர் பாலச்சந்தர், மகிளா காங்கிரஸ் நிர்வாகி ஜெயந்தி ஆகியோர், பாட்டிலில் வைத்திருந்த தண்ணீரை வாயில் ஊற்றி, பேனரில் இருந்த மாநில அமைப்பாளர் செல்வராஜ் படத்தில் துப்பி, அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். துப்புவது போல போஸ் கொடுத்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். இதைப் பார்த்த பலரும் முகம்சுளித்தனர்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: