Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டில்லி ஜும்மா மசூதி துப்பாக்கிச்சூடு : ஒத்துழைப்பு தராத மும்பை போலீசார்

டில்லியில் நடந்த துப்பாக்கிச் சூடுவிவகாரம் குறித்து மும்பைக்கு விசாரிக்கச் சென்ற டில்லி போலீசார், மும்பைபோலீசாரின் ஒத்துழைப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
டில்லியில் ஜும்மா மசூதி அருகே கடந்த வாரம் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள், அங்கிருந்த தைவான்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மீது, சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில், இருவர் படுகாயம் அடைந்தனர்.இந்த சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில், குறிப்பிட்ட சில செய்திநிறுவனங்களுக்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பு சார்பில் இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில், காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் வகையில், இதுபோன்ற தாக்குதல்களை நடத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இ-மெயில், மும்பையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரிப்பதற்காக மூன்று அதிகாரிகள் அடங்கிய டில்லி போலீஸ் குழு, மும்பை வந்தது.ஆனால், அதற்கு முன்னதாகவே எந்த எண்ணிலிருந்து இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டது என்ற விவரத்தை,சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்புநிறுவனத்திடம் இருந்து, மும்பை பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் பெற்றிருந்தனர். குறிப்பிட்ட அந்த எண்கள், மீடியாக்களிலும் வெளியாகிவிட்டன.இதனால், மும்பை சென்ற டில்லி போலீசார் அதிருப்தி அடைந்தனர். இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்ட எண் குறித்த ரகசியம் வெளியானதால், விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என, அவர்கள் கருதினர்.இதையடுத்து, அவர்கள் ஏமாற்றத்துடன் டில்லி திரும்பினர். மும்பை போலீசாரிடையே சிறப்பான ஒருங்கிணைப்புஇல்லாததே இதற்கு காரணம் என,தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டில்லி போலீசார், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்ததாகவும், இதையடுத்து, விசாரணையில் வெளியாகும் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என, மும்பை போலீசாருக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரிக்ஷாக்காரருக்கு பாராட்டு: இதற்கிடையே, டில்லியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை துரத்திச் சென்று பிடிக்க முயற்சித்த ரிக்ஷாக்காரர் சலீம் அகமதுக்கு, பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி சார்பில் நேற்று டில்லியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் சலீம் அகமதுக்கு, 25 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
thanks d.malar

Leave a Reply