Friday, August 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரதமருக்கு வயது 78

பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தனது 78வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தலைவர்கள் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்தனர்.பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி அமீது அன்சாரி ஆகியோர் பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி ஆகியோர் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினர்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.பிரதமரின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் முதல்வர் கருணாநிதி, “நீங்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியுடனும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், திருப்தியுடனும் வாழ வேண்டும். நமது நாடு உங்களுடைய சக்தி வாய்ந்த தலைமையின் கீழ் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை அடையும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.பிரதமருக்கு கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: