கெளதம் மேனன் தயாரிப்பில் அவரது உதவியாளர் வீரா இயக்கி வரும் நடுநிசி நாய்கள் படத்தின் பணிகள் நிறைவுக் கட்டத்தை எட்டி உள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதே சமயம் கெளதமின் வெப்பம், அழகர்சாமியின் குதிரை ஆகிய படங்களின் பணிகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கெளதம் மேனன் தனது அடுத்த தயாரிப்பான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். இந்த படம் கெளதம் மேனனின் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் மற்றும் 20வது சென்சுரி ஃபாக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாராக உள்ளது. இந்த படத்திற்கான இசையை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அமைக்க உள்ளார். அது மட்டுமின்றி கெளதம் தனது ஆஸ்தான தொழில்நுட்ப கலைஞர்களான ஆன்டனி, ராஜீவன், நளினி ஸ்ரீராம், மனோஜ் பரமஹம்சா ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் பணிகள் மிக விரைவில் துவங்கப்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
I can’t wait to get my hands on this awe inspiring game. I can tell I’ll be getting insufficient rest until I defeat the game!!