Saturday, July 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இஷ்டத்துக்கு பேரு வைக்கிறாங்க! தமிழக அரசு

தமிழ் திரையுலகில் தமிழ் பெயர் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பெயர் வைத்து விட்டு வரிவிலக்கு கேட்கிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட் மாட்டாது என்றும் அரசின் புதிய அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி முழுமையாக விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி ஏற்கனவே அறிவித்துள்ளார். தமிழ்த் திரைப்பட துறையினரோடு கலந்து ஆலோசித்து எடுக்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு இணங்க அந்த அறிவிப்பையும், தமிழ் மொழி வளர்ச்சியையும் கவனமாக கருத்தில் கொண்டு தமிழ்ப்படங்கள் தயாரித்தவர்கள் கேளிக்கை வரிவிலக்கைப் பெற்று பயன் அடைந்திருக்கிறார்கள். இடையிலே, ஒருசிலர் தங்கள் விருப்பத்திற்கு பெயர்களை வைத்துக்கொண்டு அதுவும் தமிழ்தான் என்று வாதாடுவதும், வரிவிலக்கு கோரி பரிந்துரை செய்வதும், தற்போது வழக்கமாகி வருவதை கண்டு பெரிதும் வருந்துவதோடு, தொடக்கத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைப்படி, எந்த ஒரு திரைப்படமும் தமிழில் பெயரிடப்படாமல் வெளிவருமேயானால் அந்த திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு கண்டிப்பாக வழங்கப்படாது என்று தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
thanks d.malar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: