இந்த மாத (செப்டம்பர்) உரத்த சிந்தனை மாத இதழில் வெளிவந்த கவிதை
குட்டியூண்டு
கூண்டுக்கிளி சோதிடம்
சொன்னது
வானில் பறந்து
வெளிநாடு செல்வாய் என . . .
வாய்த்தகராறில்
பாழடைந்த வீடு . . .
வாழ்க்கைத் துவங்கியது
சிலந்தி!
பெற்றோரால் நடக்க
முடியவில்லை மகள்
ஓடிப்போனதால் . . .
– எழுதியவர் கவிஞர் நா.கி. பிரசாத் அவர்கள்