வேரில்லா
கொடியின்
காம்பில்லா
மலரின்
இதழை
கைபடாது
பறித்திடவா
எனக் கேட்க
கனம் இல்லா
தலைக்கேட்டு
தனமில்லா
தனவானும் இணங்க
நீரில்லா
குளத்தின்
நடுவே
அனல்காற்றை
முன்னிறுத்தி
வாய் இல்லாத
ஊமைகள் வாழ்த்த
கண் இல்லாத
குருடர்கள் பார்க்க
செவி கேளா
செவிடர்கள் கேட்க
அறுபடா
நூலெடுத்து
முடிகள்
மூன்று
சூடும் வேளையில்
பறித்திடுவாய்
என்றே பதிலுரைத்தாள்
எழுதியவர் ராசகவி ரா சத்தியமூர்த்தி
எங்களின் விதை2விருட்சம் (www.vidhai2virutcham.wordpress.com) இணைய தள வாசக பெருமக்களே!
இக்கவிதையை படித்துப்பார்த்து தகுந்த பொருளுரையை அல்லது விளக்கவுரை யை vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களுடைய புகைப்படத் துடன் அனுப்பி வைக் குமாறு கேட்டுக்கொள்கிறோம். சரியான பொருளுரை அல்லது சரி யான சிறந்த விளக்கவுரையை தேர்ந்தெடுத்து நமது விதை2விரு ட்சம் (www.vidhai2virutcham.wordpress.com) இணைய தளத்தில் தங்க ளுடைய புகைப்படத்துடன் தங்களது விளக்கவுரையும் வெளியிடப் படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
super
புரியுது ஆனா புரியல!!!
அட என்ன இது. விடுகதை கேள்விப்பட்டிருக்கோம்
இது என்ன புதுக்கவிதையில் ஒரு விடுகதையா?
அசத்தறாங்கப்பா! அசத்தறாங்கப்பா!!
Ra Ra Vilakkam Solla Ra Ra