Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாகிஸ்தான், ஐ.நா. சபை கூட்டத்தில் உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பவே காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியதாக

உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பவே ஐ.நா. சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியதாக தெரிவித்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
ஐ.நா. சபையில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ அங்கிருந்து இந்திய படையினர் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐ.நா. கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பவே ஐ.நா. சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியதாக குற்றம் சாற்றினார்.
நியூயார்க்கில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவரிடம், ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியை சந்தித்துப் பேசுவீர்களா என்று கேட்டபோது, அப்படி ஒரு திட்டமில்லை என்றார்.
அதே சமயம் குரேஷி இந்தியா வரும்போது இரு நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடரும் என்றார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: