கடந்த ஜூன் மாத பெட்ஸ்விஷன் (பிராணிகள் நலத்திற்கான மாத இதழ்) -ல் ‘நாய்ய பற்றி நான் எழுதிய எனது கவிதை
விசுவாசத்தின் விசுவரூபம்
வட்டாரத்தில்
வட்டமிட்டு
கூடாரத்தில்
கூடிவாழ்ந்து
ஆவலாய் ஓடிவந்து ஒரே
தாவலாய் மடிமீதேறும்
காவலுக்கு கெட்டிக்காரன் நீ
உருவத்தில் நீ நாயாக
இருந்தாலும் உனை வளர்ப்போரை தாயாக
பாவிக்கும் சேயாக எனக்கு நீ
துயரத்திலும் தூயவனாய்
துன்பத்திலும் இன்பமாய்
துக்கத்திலும் பக்கத்துணையாய்
ஆக்கத்திலும் ஊக்கமாய் இருக்கும் நீ
உண்மையில்
விசுவாசத்தின்
விசுவரூபம்தான் நீ
– எழுதியவர் இராசகவி ரா சத்தியமூர்த்தி
Nice. Keep it up.