Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நடிகை அமலா தாக்கு: வன்முறை சினிமா

சத்யா, மெல்லத் திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மவுனம் சம்மதம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை அமலா. தெலுங்கு ஹீரோ நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகி, இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் விலங்குகள் நல வாரியத்தில் உறுப்பினராகி, விலங்குகள் வதைக்கு எதிரான பிரசாரத்தில் மும்முரம் காட்டி வருகிறார்.
விலங்குகளுக்கு எதிராக நடக்கும் சம்பவம் குறி்த்து அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமாவை கடுமையாக சாடியிருக்கிறார். இப்போதெல்லாம் சினிமாக்களில் வன்முறை காட்சிகள் பெருகி விட்டது. வன்முறை, கற்பழிப்பு, கொலை, ஆபாசம் இல்லாமல் படங்களை பார்ப்பது அரிதாக இருக்கிறது. நாகார்ஜூனா படங்களிலும் அதிக அளவில் வன்முறை காட்சிகள் இருக்கிறது. இதுபோன்ற காட்சிகளைக் காட்டித்தான் மக்களை கவர வேண்டுமா? மனதை கவருவதற்கு மற்ற காட்சிகளே கிடைக்கவில்லையா? இதை இயக்குனர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சமுதாயத்தில் குற்றங்கள் குறைவதற்கு ஏற்ப வன்முறை காட்சிகளை குறைக்க வேண்டும், என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply