Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாதுகாப்பு பணியில் 1 லட்சம் பேர்: காமன்வெல்த் போட்டி

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி வருகிற 3-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை டெல்லியில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படுகிறது.
அதே போல உள்ளூரில் உள்ள நக்சலைட்டுகளாலும் மிரட்டல் இருக்கிறது. வெளிநாட்டு வீரர், வீராங்கனைகளை கடத்தியும், தாக்குதல் நடத்தவும், தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
இதை தொடர்ந்து காமன்வெல்த் போட்டி பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ளது. “இசட் பிளஸ்” பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு பணியில்1 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தை சேர்ந்த 13 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
இதே போல டெல்லியிலும் 1,600 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டுள்ளது. போலீசார் மோப்ப நாயுடன் அனைத்து இடங்களிலும் வலம் வருகிறார்கள்.

Leave a Reply