Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குவாட்டர் கட்டிங் தீபாவளிக்கு ரிலீஸ் . . .

குவாட்டர் கட்டிங் என்ற கிக்கான பெயரில் எடுக்கப்பட்டு, பின்னர் வ என்று பெயர் மாற்றப்பட்டிருக்கும் மிர்ச்சி சிவாவின் அடுத்த படம் தீபாவளிக்கு ரீலிஸ் ஆகிறது. பெயரை மாற்றினாலும் ரசிகர்கள் குவாட்டர் கட்டிங் என்றுதான் சொல்கிறார்கள் அந்த படத்தை. தமிழ் படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ்தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

முதல் படமான தமிழ் படம் ஏகத்துக்கும் ஹிட் ஆனதால், இப்போது குவாட்டரின் விலை எக்குதப்பாக எகிறியிருக்கிறதாம். முந்தைய படத்தைப் போலவே இந்த படத்தையும் வெளியிடுகிற உரிமை துரை.தயாநிதியின் க்ளவுட் நைன் நிறுவனத்தின் கையில்தான் உள்ளது. விநியோகஸ்தர்கள் மத்தியில் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் கிளவுட் நைன் நிறுவனம் சந்தோஷத்தில் மிதக்கிறது. அதேநேரம் இந்த படத்தின் பிஸினஸ் ரூ.8 கோடியை தொட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் திரைக்கு வருவதாக இருந்த குவாட்டர் கட்டிங்கை இப்போது தீபாவளிக்கு திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். விநியோகஸ்தர்கள் பலரும் வைத்த வேண்டுகோளின்படிதான் இந்த தள்ளிவைப்பு சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: