தேவையான பொருட்கள் –
ரொட்டித்துண்டு – 8 துண்டுகள்
சர்க்கரை – 200 கிராம்
ஏலக்காய் – 5 எண்ணிக்கை
நெய் – 80 கிராம்
கேசரி பவுடர் – தேவையான அளவு
செய்முறை:
ரொட்டித்துண்டுகளைச் சிறிசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுப்பில் இருப்புச்சட்டியை வைத்து அதில் நெய்யை ஊற்றுங்கள். ரொட்டித் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொருத்தி எடுத்துக்கொ ள்ளவேண்டும்.
ஏலக்காயை இடித்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள். கேசரி பவுடரைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றி அதில் சர்க் கரையைப் போட்டுக் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்ச வே ண்டும். அடுப்பை சிறதீயில் அதாவது சிம்–ல் வைத்து எரயவிட வேண்டும்.
சர்க்கரைக் கலைவை பாகுபதம் வந்த்தும் பாத்திரத்தை அடுப்பி லிருந்து இறக்கி வையுங்கள். சற்று நேரம் கழித்து அது ஆறியதும் பொரித்து வைத்திருக்கும் ரொட்டித் துண்டுகளைப் போடுங்கள். நன்றாக ஊறியதும் ஜீராவுடன் எடுத்து ஒரு சுத்தமான பாட்டிலில் கொட்டி மூடி வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும்போது எடு த்து சாப்பிடுங்கள்.
– vidhai2virutcham