ஒரு வீட்டின் தொலைபேசி கட்டணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத் தலைவன்,
அது பற்றி பேச தனது குடும்பத்தினரை அழைத்தார்.
காலை வேளையில் எல்லோரும் ஒன்று கூடினர், குடும்பத் தலைவர் கோபத்துடன், நான் வீட்டில் உள்ள தொலைபேசியைப் பயன்படுத்துவதே இல்லை. என் எல்லாவிதமான அழைப்புகளையும் நான் என்னுடைய அலுவலக தொலைபேசியிலேயே முடித்துக் கொள்கிறேன். இருந்தாலும், இந்த மாதம் தொலைபேசிக் கட்டணம் இவ்வளவு வந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன என்பது தெரிந்தாக வேண்டும் என்று கத்தினார்.
இதற்கு பதிலளித்த மனைவி, எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது. நான் என் தோழிகளுடன் அலுவலக தொலைபேசியில் மட்டுமே பேசுவேன். வீட்டிலிருந்து யாருக்கும் போன் செய்ததே இல்லை என்று கையை விரித்தார்.
உடனே எழுந்த மகன், நான் வீட்டில் பாதி நேரம் இருப்பதே இல்லை. எப்போதும் அலுவலகத்தில் தான் இருக்கிறேன். அப்படி இருக்க வீட்டு தொலைபேசியை நான் பயன்படுத்த வாய்ப்பே இல்லையே என்றார்.
அப்போது அங்கிருந்த வேலைக்காரி… எல்லோருமே வேலை இடத்தில் இருக்கும் போனை மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்றாளாம். அனைவரும் விக்கித்து நின்றனர். thanks w.dunia