Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வில்லனை உருமாற்றிய பாலா

வேகவேகமாகப் படம்பிடிக்கப்பட்டுவரும் அவன் இவன் படத்தின் செய்திகள் நாளுக்கு நாள் சூடாக வெளிவந்த வண்ணமிருக்கின்றன. இந்தப் படத்தில் ஆர்.கே. முக்கிய வில்லன் என்ற சூடான செய்தி வெளியாகி அடங்குவதற்குள் அடுத்த சூடான செய்தி இப்போது கசிந்திருக்கிறது. அவன் இவனில் இடம்பெற்றுள்ள இன்னொரு முக்கிய வில்லன் கதாபாத்திரம் பற்றிய ரகசியம்தான் இது. கோலிவுட் வட்டாரத்தைப் பொறுத்தவரை இயக்குநர்களுக்கு சென்னையில் உள்ள இரண்டு தியேட்டர் முதலாளிகள் மீது எப்போதுமே ஒரு கண் உண்டு. அந்த இரண்டு பேரில் ஒருவர் அபிராமி ராமநாதன். இவரை கே.பாலசந்தர் நடிக்க அழைத்தும் மறுத்துவிட்டார். ஆனால் இன்று வரை அவர் மேடை நாடகங்களில் நடித்துவருகிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அதேபோல பாரதிராஜாவில் தொடங்கி நடிக்க அழைக்கப்பட்டவர் சென்னை வடபழனி கமலா திரையரங்கின் அதிபர் வி.என். சிதம்பரம் செட்டியார். இவரைத்தான் இயக்குநர் பாலா அவன் இவனில் மற்றொரு முக்கிய வில்லனாக நடிக்க வைத்திருக்கிறார். திரைத்துறை மீது அளப்பரிய விருப்பம் கொண்ட சிதம்பரம் தனது தியேட்டர் வருமானத்தில் 10% தொகையை, ஏழைத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகச் செலவழித்துவருகிறார். மதுரையில் தனது ஆத்மார்த்த நண்பர் சிவாஜி கணேசனுக்குச் சிலை அமைத்திருக்கிறார் என்று இவரைப் பற்றிச் சொல்வதற்கு நிறைய இருந்தாலும், அவன் இவன் தனக்குப் புகழைக் கொண்டு வந்து சேர்க்கும் என்கிறார். சிதம்பரத்தின் உடல்நலம் கருதி உட்கார்ந்த இடத்தில் இருந்தே டெரரான லுக்குகள் மூலம் சிதம்பரத்தை மிரட்சியான வில்லனாக உருமாற்றியிருக்கிறாராம் பாலா. thanks d.malar

Leave a Reply