தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1/2 கிலோ
- பாசிப்பருப்பு – 200 கிராம்
- வெல்லம் – 1 கிலோ
- பால் – 1/2 லிட்டர்
- நெய் – 100 கிராம்
- முந்திரி – 100
- சுக்கு – சிறிது
- ஏலக்காய் – 10
- தேங்காய் – 1
முதலில் செய்யவேண்டியவை:
- அரிசியை தண்ணீர் விட்டு நன்கு கழுவி தண்ணீரை வடித்துக்கொள்ளவும்.
- பாசிப்பருப்பை ஒரு வடச்சட்டியில் (வாணலியில்) போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
- ஏலக்காய், சுக்கு இரண்டையும் மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.
- முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
- தேங்காயை நன்கு துருவிக்கொள்ளவும்.
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- பால் பொங்கி வரும்போது அரிசியை போட்டு நன்கு வேக விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவிடவும்.
- அரிசியும், பருப்பும் நன்கு வெந்ததும் அதில் வெல்லத்தை சேர்த்து நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- நன்கு கிளறிய பின்பு வறுத்த முந்திரி, துருவிய தேங்காய் இரண்டையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அதன் பிறகு ஏலக்காய், சுக்கு பவுடரையும் சேர்த்து நன்கு கிளறவும்.
- அடுப்பில் இருந்து இறக்கும் போது நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கினால் மிகவும் சுவையான சக்கரைப் பொங்கல் தயார்.
Thanks Kalpana