ஏராளமான உள்ளூர் விருதுகளை வாங்கி குவித்த பசங்க திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்தது. தேசிய விருது உற்சாகம் குறைவதற்குள்ளாகவே இன்னொரு உற்சாகம் வந்திருக்கிறது பசங்க டீமுக்கு. சீனாவின் ஜியாங்ஜெயின் நகரில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் பசங்க படம் திரையிடப்பட உள்ளது. அக்டோபர் 11ம்தேதி முதல் முதல் 16ம் வரை, 19வது சீன கோல்டன் ரூஸ்ட்டர் திரைப்பட விழா ஜியாங்ஜெயின் நகரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் திரையிடுவதற்காக இந்தியாவின் சார்பில் பசங்க திரைப்படம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அறிமுக இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சசிக்குமார் தயாரிப்பில் உருவான படமாகும். சீனத் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக இருவரும் அந்நாட்டுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
thanks d.malar