மத்திய மந்திரி மு.க.அழகிரி கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் உள்ள கொடிக்குளம், திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று மத்திய மந்திரி மு.க.அழகிரி கீழமாத்தூருக்கு சென்று அங்குள்ள பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஏற்கனவே அந்த பகுதியில் பெறப்பட்ட மனுக் கள் மீதும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுத்தார்.அதன்படி இன்று அந்த பகுதியில் ஏற்கனவே மனு அளித்த 446 பேருக்கு முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைபட்டா, தையல் எந்திரம், தேய்ப்பு பெட்டி போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காமராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர் தள பதி, மூர்த்தி எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறு?பினர் 2ரேஷ்பா1, வருவாய்த்துறை அதிகாரி தினேஷ்சீடுலிபர் பொன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-கடந்த பாராளுமன்ற தேர்தலில் மதுரை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி அழகுப்படுத்தவும், பூங்காக்கள் அமைக்கவும் ரூ.14 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
மேலும் திடீர்நகர் மேல வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்து வருகிறேன்.கோரிக்கைக்கு தீர்வு கிடைத்தவர்கள் என்னிடம் மகிழ்ச்சியை தெரிவிக்கிறார்கள். அது எனக்கு மனநிறைவை தருகிறது.இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகள் வருமாறு:-கேள்வி:- வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்க கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது என ஜெயலலிதா குற்றம்சாட்டி உள்ளாரே?பதில்:- குண்டுமேல் குண்டுபோட முடியுமா? என ஏற்கனவே நான் கூறி இருக்கிறேன். அதேதான் இப்போதும் கூறுகிறேன். அவர் சொல்வது குறித்து எனக்கு கவலை இல்லை.
கே:- மீண்டும், மீண்டும் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டு இருக்கிறதே? என்று கூறி வருகிறாரே?ப:- சுய விளம்பரத்தை தேடிக்கொள்வதற்கும் ஜெயலலிதா இதை கூறி கொள்கிறார். அல்லது மதுரை கூட்டத்தை ரத்து செய்வதற்கு கூட இதனை ஒரு காரணமாக கூறி வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
Mate thanks for this website. I absolutely agree with it
What a great blog. Good job