தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவதில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெற தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. மின்னணி வாக்குப்பதிவுகளில் குளறுபடி ஏற்படுவதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி வருவது தொடர்பான ஆலோசனையும் இக்கூட்டத்தில் நடைபெற உள்ளது. 5 தேசிய கட்சிகளும், 50 மாநில கட்சிகளும் பங்கேற்க உள்ள இக்கூட்டத்தில் கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.