அம்மையப்பனாக விநாயகர் காட்சித் தருவது சுசீந்தரம் தாணுமாலையன் கோவில்தான். இங்கு சிவனும் பார்வதி தேவியும் சேர்ந்து விநாயகப் பெருமானாக நீலகண்ட விநாயகராக காட்சித் தருகின்றார். இங்கே விநாயகரை கடைசியில் வழிபடுமாறு அமைத்துள்ளனர்.
பிள்ளையாருக்கு பிடித்த நைவேத்திய பட்சணங்கள்
மோதகம், அவல், அப்பல், அவல், பொரி கடலை, கரும்பு, மா, பலா, வாழைப்பழம், நாவல் பழம், விளாம்பழம், தேங்காய், இளயநீர், அவரை, துவரை, சுண்டல், புட்டு, பொங்கல், எள் உருண்டை, வடை, பாயசம், அப்பளம், தேன், கற்கண்டு, சர்க்கரை, தினைமாவு, பால், கரும்பு பாகு, அதிரசம், போன்றவைகளை விநாயகருக்கு படைத்து வழிபடுபவர் யாராக இருந்தாலும் அவர் வாழ்வில் சிறந்த நிலையை அடைவார்கள்.
அனைவருக்கும் பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை .
வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும் (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் , அனைத்து தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் .
இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை .
குணங்களையும் கடந்து, அனைத்து தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை .
அனைத்து பூஜைகளுக்கும் தொடக்கத்தில் அவர் வழிபடப்படுகிறார் .
மேலும் எளியருக்கு உகந்த தெய்வம் .
ஆலயங்கள் கேட்பதில்லை .குளத்தடி,அரச மரத்தடி போதும்.
எளிய துதிகள் போதும்.
மஞ்சள் மற்றும் மண்ணால் அவரைப்பிடித்து வழிபடலாம்.பார்வதி அவரை கடல் நுரையாலும் ,சிவன் மஞ்சளினாலும் வழிபட்டுள்ளனர் .
உபநிஷத்தில் உயர்ந்தது Ganopanisad.தமிழில் உயர்ந்த ஞான நூல் அவ்வை அருளிய விநாயகர் அகவல் ,அனைத்து தத்துவங்களும் யோகமும் கூறப்பட்டுள்ளது .
வெள் எருக்கினால் செய்த விநாயகரை பூசித்தல் மிகவும் சிறந்தது.
மேலும் இந்துமதம் மற்றும் இந்து தத்துவங்களைப் பற்றி அறியவேண்டுமெனில் இந்ததளத்தில் வினாக்கள் தொடுக்கலாம் .இயன்றவரை ஆதார பூர்வமான விடை அளிக்க முயல்கிறேன்