தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் ஒரு விநாயகர் கோவில் உள்ளது. ஒரு சமயம் அங்கு ஏற்பட்ட கலவரத்தில் கோவிலில் இருந்த எல்லா விளக்குகளையும் சில விஷமிகள் உடைத்து எறிந்துவிட்டனர். வெளிச்சம் இன்றி கோவில் இருண்டது. ஒரே நாளில் அவ்வூரில் உள்ள எல்லா மதத்தினரும் ஒன்று கூடி கோவிலை சீர்செய்து ஒளி பெறச்செய்தனர். அன்றிலிருந்து அங்கு எழுந்தருளிய விநாயகர் மத அமைதி காத்த விநாயகர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.