மீண்டும் உங்களை விதை2விருட்சம் என்ற எங்களது இணையதளத்தின் மூலம் இசையை பற்றி அறிய வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையதளம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
முன்பு கூறிய 7 ஸ்வரங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா வாசகப் பெருமக்களே!
அவை
ஸ, ரி, க, ம, ப, த, நி,
ஆகியவைகள் ஆகும்.
இந்த ஏழு ஸ்வரங்களும்
ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ்
என்று பாடினால் அது ஆரோஹணம் என்றும்
ஸ், நி, த, ப, ம, க, ரி, ஸ
என்று பாடினால் இது அவரோஹணம் என்றும்
அழைக்கப்படுகிறது.
இந்த 7 ஸ்வரங்களும்
12 ஸ்வரங்களாக பிரிந்து ராகங்களை உருவாக்குவதில் மிகப் பெரிய பங்காற்றி வருகிறது.
அவை
ஸ – ஷட்ஜம்
ரி1 – சுத்த ரிஷபம்
ரி2 – சதுஸ்ரிதி ரிஷபம்
க1 – சாதாரண காந்தாரம்
க2 – அந்தர காந்தாரம்
ம1 – சுத்த மத்தியமம்
ம2 – ப்ரதி மத்தியமம்
ப – பஞ்சமம்
த1 – சுத்த தைவதம்
த2 – சதுஸ்ருதி தைவதம்
நி1 – கைஷிக நிஷாதம்
நி2 – காகலி நிஷாதம்
ஆகும் .
இவற்றில் ஸ மற்றும் ப ஆகிய இரண்டு ஸ்வரங்களுக்கும் பேதம் கிடையாது.
ஏனைய ஐந்து ஸ்வரங்களான ரி, க, ம, த, நி ஆகியவற்றிற்கு பேதம் உண்டு.
இசை என்னும் அமுதத்தைப் பருகிட காத்திருங்கள்