இந்தியாவின் மதம், தத்துவம், ஆன்மீகம் இவற்றால் பெரிதும் கவரப்பட்டவர் அன்னிபெசண்ட் அம்மையார் அவர்கள். லண்டன் நகரில் பிறந்த இவர் தனது 46 ஆம் வயதில் இந்தியாவுக்கு வந்தார். தன்னை ஒரு இந்தியராகவே கருதிய அன்னிபெசண்ட் அம்மையார், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். ஹோம் ரூல் என்ற இயக்கத்தை நடத்தினார். நியூ இந்தியா என்ற தினசரி பத்திரிகைகளையும் தொடங்கினார். இந்தியாவின் மதிப்புமிக்க பெண்மணியக அன்னிபெசண்ட் அம்மையார் என்றால் அது நமது இந்தியத் திருநாட்டிற்கே பெருமை அல்லவா?