Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

புதுமையான மின்னணு பொருட்கள் தயாரிப்புக்கும், வருங்காலத் தகவல் தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தவும் என்று வர்ணிக்கப்படுகிற ‘கிராபீன்’கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிட்டு வரும் நோபல் பரிசுக் கமிட்டி, நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்குரியவரை அறிவித்திருந்தது.

இந்நிலையில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இதனை
பிரிட்டனைச் சேர்ந்த நோவோசெலோவ் ( 36) என்ற விஞ்ஞானியும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆந்த்ரே கெய்ம் (51) என்ற விஞ்ஞானியும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இவர்கள் இருவரும் ‘கிராபீன்’ கள் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இந்த பரிசை பெறுகிறார்கள்.

கார்பன் அணுக்களை தட்டையான வடிவத்தில் அமைத்து, குவாண்டம் இயற்பியல் ஆராய்ச்சியி்ன் புதிய பரிமாணங்களை இரு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்தற்காக இந்த பரிசு வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் கமிட்டி வெள்யிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply