திருமணத்திற்கு முன்பே ஆணும் பெண்ணும் பழகிப் பார்க்கும் டேட்டிங் கலாச்சாரம் நம் நாட்டில் அதிகம் பரவவில்லை என்றாலும் மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமாக வலம் வந்துகொண்டிருக்கிறது இளசுகளின் மனசில். டேட்டிங்களிலேயே விதவிதமாக உண்டு. அவற்றில் புதியதாக டி.என்.ஏ. டேட்டிங், ஜீன் பார்ட்டனர் டாட் காம் என்ற இணையதளம் இதற்கு ஏற்பாடு செய்கிறது. இந்த இணைய தளத்தில் உங்களின் டி.என்.ஏ. எனப்படும் மரபணு மாதிரிகளைக் கொடுத்தால் அதைப்போலவே மரபணுவைக் கொண்ட துணையை தேர்ந்தெடுத்துகொடுப்பார்கள். ஒரே மாதிரியான மரபணுவை கொண்டவர்களின் நடை உடை, பாவனை ரசனை எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும்? இப்படிப்பட்ட இருவர் இணைந்தால் அருமையாக இருக்கும் என்கிறார்கள். இந்த இணையதளத்தினர். இது எந்த வகையில் மனித வாழ்க்கை ஒத்துவருமா என்பது கேள்விக்குறிதான்.
Wow, just what I was looking pro!
Thanks for sharing ! I like your point of view. Keep going !