டில்லியில் நடக்கும் காமன்வெல்த் போட்டியின் மல்யுத்தத்தில் இந்தியா பதக்கங்களை குவித்துவருகிறது. இதனை தடுக்க ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் இணைந்து பெரும் சதியில் ஈடுபட்டுள்ளன. இதன் விளைவாக, வரும் 2014ல் கிளாஸ்கோவில் நடக்க உள்ள அடுத்த காமன்வெல்த் போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தம்மற்றும் “கிரிக்கோ-ரோமன்’ பிரிவு நீக்கப்படுகிறது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் வரும் 2014ல் 20வது காமன்வெல்த் போட்டி நடக்கிறது. இதில், பெண்களுக்கான மல்யுத்தம் மற்றும் “கிரிக்கோ-ரோமன்’ பிரிவை நீக்குவது என, காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு, இந்திய வீரர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னணியில் ஆஸ்திரேலியாவின் சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். நீச்சலில் ஆஸ்திரேலியா அதிக பதக்கங்களை தட்டிச் சென்றது. அதற்காக நீச்சலை, போட்டிகளில் இருந்து நீக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து இம்முறை “கிரிக்கோ-ரோமன்’ பிரிவில் தங்கம் வென்ற சஞ்சய் குமார் கூறுகையில்,””கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறோம். தற்போது”கிரிக்கோ-ரோமன்’ பிரிவை நீக்குவது என்பதை ஏற்க இயலாது. மல்யுத்தத்தில் இந்திய வீரர், வீராங்கனைகளை சமாளிக்க முடியாததால், ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து சதி செய்துள்ளன. இதனை எதிர்த்து போராடுவோம்,” என்றார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் மாந்திர் கூறுகையில்,””டில்லி போட்டியில் தான் “கிரிக்கே-ரோமன்’ மற்றும் பெண்களுக்கான மல்யுத்தம் அறிமுகமானது. இதில், இந்திய நட்சத்திரங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கங்களை குவித்தனர்.இந்தச் சூழலில் இப்போட்டிகளை நீக்குவது என்ற காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. இதனை எதிர்த்து குரல் கொடுப்போம்,” என்றார்.
இந்திய அணியின்பயிற்சியாளர் ஹர்கோபிந்த் சிங்கும் கடும் எதிர்ப்புதெரிவித்தார்.
இது குறித்து இவர் கூறுகையில்,””இந்தியர்களுக்கு எதிரான இனவெறி என்று கூறலாம். நமது வீரர்கள் பதக்கம் வெல்ல கடுமையாக பாடுபடுகின்றனர். ஸ்காட்லாந்தில் மல்யுத்தம் அவ்வளவு பிரபலம் அல்ல. இதன் அடிப்படையில் தான் மல்யுத்தத்தை நீக்க முயற்சிக்கின்றனர்.”கிரிக்கோ ரோமன்’ தவிர, “பிரிஸ்டைல்’ பிரிவை சேர்ப்பதிலும் குழப்பம் நிலவுகிறது,” என்றார். thanks dinamalar