Friday, September 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்: இந்தியா அயோத்தி தீர்ப்பு சரியானது

அயோத்தி நில வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகவும் சிறந்தது, சரியானது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.  காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும் உள்ள திக்விஜய் சிங், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அவர் மேலும் கூறியது:  இப்போதுள்ள சூழ்நிலையில் அயோத்தி நில வழக்கில் இதைவிட சிறந்த தீர்ப்பைக் கூறி விட முடியாது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு அந்த நிலத்தில் உள்ள உரிமையை தீர்ப்பு நிலைநாட்டியுள்ளது. தீர்ப்பு மூலம் வழக்குத் தொடர்ந்த அனைவருக்கும் வெற்றி கிடைத்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் பாபர் மசூதியை இடித்ததை ஒருபோதும் மன்னிக்க முடியாது என்றார்.  தீர்ப்பால் முஸ்லிம்கள் விரக்தியடைந்துள்ளனர் என்று கூறப்படுவதை ஏற்கிறீர்களா என்ற கேள்விக்கு, தீர்ப்பால் முஸ்லிம்கள் விரக்தியடைய தேவையில்லை. எனெனில் அவர்களுக்குரிய அயோத்தி நிலத்தில் அவர்களுக்கு உள்ள உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்று திக்விஜய் சிங் பதிலளித்தார்.  இதுபோன்ற பிரச்னைக்குரிய நேரத்தில் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்துடன் ஆர்எஸ்எஸ் அமைப்பை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியிருப்பது குறித்து அவரிடம் கருத்துக் கேட்கப்பட்டது.  எதிர்க்கட்சிகள் கூறுவது போல ராகுல் பேசியிருப்பது முதிர்ச்சியற்ற பேச்சு அல்ல, இவர் சரியான நேரத்தில்தான் தனது கருத்தைக் கூறியுள்ளார். சிமி உறுப்பினர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதேபோன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ராகுல் காந்தி அதிக விஷயங்களை படித்து, அதன் மூலம் தெரிந்து கொண்ட விஷயத்தை வைத்துதான் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து கருத்துக் கூறியுள்ளார். அதில் தவறேதும் இல்லை என்றும் திக்விஜய் சிங் தெரிவித்தார்.  சுவாமி ராம் தேவ் கருத்து: அயோத்தி வழக்கு தீர்ப்பு இரு தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது என்று யோகா குரு சுவாமி ராம் தேவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.  உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்துக்கு வந்துள்ள அவர், இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது. சிறிய கருத்துவேறுபாடுகள் இருந்தால் அதனைப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது. அதையேதான் அலகாபாத் நீதிமன்றமும் கூறியுள்ளது என்றார்.

One Comment

  • Anonymous

    Definitely enjoyed your post. It was very informative and useful. Thanks for sharing. I hope you do not mind me blogging about this post on my own blog. I will also be linking back to this. Nice site theme! Gracias

Leave a Reply