Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனநோயை விரட்ட எளிய வழிமுறைகள்

ஆண்டுதோறும் அக்டோபர் 10-ந்தேதி உலக மனநல தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உலக மனநல மருத்துவக் கூட்டமைப்பால் கடந்த 1992-ம் ஆண்டு முதல் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 45 கோடி மக்கள் மனநோய் மற்றும் மூளை நரம்பியல் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
உலக நாடுகளில் மக்கள் அனைவரும் மனநலத்திற்கு முன்னுரிமை அளிப்பதை இந்த ஆண்டு மனநல தினத்தில் உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மனநலத்தை பாதுகாப்பது பற்றி சென்னை அம்பத்தூரில் உள்ள “லார்டு” மனநல மறுவாழ்வு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் கூறியதாவது:-
நமது சமூகத்தில் அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் மனச்சிதைவு நோய் அதிகமாகும் என்ற கருத்து பரவலாக காணப்படுகிறது. இந்நாட்களில் இந்நோய் அதிகரிக்காது. மாறாக, குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் அவரை மனநோயாளி என்று கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். இந்நோய் அதிகமாகும் என்று எதிர்பார்ப்பதால் அவரின் இயல்பான செயல்களில் கூட அதிக மாற்றங்கள் இருப்பது போல தோன்றும்.
மனச்சிதைவு நோயின் தீவிரம் குறைந்த நிலையிலோ அல்லது முற்றும் சரியான நிலையிலோ வேலை செய்வதும் தொடர்ந்து கல்வி கற்பதும் சாத்தியமாகும். ஆகையால் நோயாளியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யதார்த் தமான அணுகு முறையுடன் எதிர் காலத்தை திட்டமிட வேண்டும். நோயாளிகளால் சிறந்த முறையில் செயல்பட முடியவில்லை என் றாலும், படிப்படியாக சிறு சிறு வேலைகளை செய்ய பழக்கப்படுத்த வேண்டும்.
மனச் சிதைவு நோய்க்கு தகுதி வாய்ந்த மனநல மருத்துவரால் மட் டுமே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும். ஆங்கில வைத்திய முறையிலே பலவிதமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த நோய்க்கான சிகிச்சை பெருமளவில் முன்னேறியுள்ளது.

நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உகந்த உணவு வகைகளைச்சாப்பிடுங்கள். மதுவோ, போதைப்பொருளோ மனக் கவலைக்கு ஏற்ற மருந்தா காது. எனவே அவற்றைத்தவிருங்கள். உங்கள் உணர்ச்சிகளைப்பற்றி பிறரிடம் பேசுங்கள். பிறர் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள். மற்றவர்களுடன் பேசி மகிழுங்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அவற்றில் ஈடுபாடு செலுத்துங்கள். உங்களின் திறமை எது, பலவீனம் எது என்பதை உணர்ந்து அவற்றுக்கு ஏற்றாற்போல் செயல்படுங்கள். உடற் பயிற்சி மூலம் செயல்துடிப்புடன் இருங்கள். இவையெல்லாம் உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும். thanks malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: