Tuesday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சு கூடாது- ஹிந்து மகாசபை அறிவிப்பு: அயோத்தி நில விவகாரம்

அயோத்தி நில விவகாரம் தொடர்பாக ஹிந்து அமைப்புகள் எந்த முஸ்லிம் அமைப்புடனும் பேசக் கூடாது என்று ஹிந்து மகாசபை கூறியுள்ளது.  பிரச்னைக்குரிய இடத்திலிருந்து ஹிந்து அமைப்புகள் வெளியேறி விடக் கூடாது என்றும் அந்த அமைப்பு பிற ஹிந்து அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது குறித்து அகில இந்திய ஹிந்து மகாசபை பொதுச் செயலாளர் மணீஷ் மகாஜன் லக்னெüவில் வெள்ளிக்கிழமை மேலும் கூறியுள்ளது:  நிர்மோகி அகாரா அமைப்புக்கு அயோத்தி நிலத்தை முழுமையாக வழங்க வேண்டுமென்று கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எந்த ஹிந்து அமைப்பும், அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளுடன் பேசக் கூடாது.  அதே நேரத்தில் அயோத்தியில் இருந்து எந்த ஹிந்து அமைப்பும் வெளியேறிவிடவும் கூடாது. அங்கு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கான சட்டப் போராட்டம் தொடரும். உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.  1730-ம் ஆண்டிலிருந்து நிர்மோகி அகாரா அமைப்பினர் அயோத்தியில் பூஜைகளை நடத்தி வருகின்றனர். அவர்களது உரிமையை கண்டிப்பாக நிலைநாட்ட வேண்டும் என்றார்.  முன்னதாக ஹிந்து மகாசபை பிரதிநிதிகள், நிர்மோகி அகாரா அமைப்பினரை சந்தித்துப் பேசினர். அப்போது இரு அமைப்பினரும் கூட்டாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து பேசப்பட்டது.  வக்ஃப் போர்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. thanks dinamani

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: