பீகார் மாநில முன்னாள் முதல்- மந்திரியும், லல்லு பிரசாத் மனைவியுமான ராப்ரிதேவி 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் ராப்ரிதேவி ராகோபூர், சோனாபூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தனது சொத்து விவரங்களை பட்டியலிட்டிருக்கிறார்.
கடந்த சட்டசபை தேர்தலில் லல்லுபிரசாத்தின் குடும்பத்தின் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1.58 கோடி. இப்போது அது ரூ.4.58 கோடியாக அதிகரித்துள்ளது.
லல்லு ராப்ரிதேவி மற்றும் அவர்களுடைய வாரிசுகளின் பெயரில் இந்த சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராப்ரிதேவியின் பெயரில் உள்ள சொத்து விபரத்தையும் மனுவில் தெரிவித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
ராப்ரிதேவி பல்வேறு பங்கு பத்திரங்களில் ரூ.11 லட்சத்து 78 ஆயிரம் முதலிடு செய்துள்ளார். ரூ.7 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் வைத்திருக்கிறார். ரூ.2.29 லட்சம் ரொக்கம் உள்ளது.
62 பசுக்களும், 42 கன்றுகளும் ராப்ரிதேவி பெயரில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 8 ஆயிரம். ராப்ரிதேவி வேட்பு மனுவில் தெரிவித்துள்ளபடி லல்லுவின் குடும்பச் சொத்தின் மதிப்பு 5 ஆண்டுகளில் ரூ.3 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
thanks malaimalar