களவாணி ஓவியா அடிக்கடி தன் மொபைல் நம்பரை மாற்றுவதால் அவரை வைத்து படம் பண்ணும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அடிக்கடி அவதிக்குள்ளாகி வருகிறார்களாம். இதுபற்றி அம்மணியிடம் கேட்டால் என் செல் நம்பரை எப்படியோ தேடிப் பிடிக்கும் ரசிகர்கள் நேரம் காலம் பார்க்காமல், இரவு நேரங்களிலும் தொந்தரவு தருவதால் இப்படி நம்பரை மாற்ற வேண்டி உள்ளது என்று புலம்புகிறார்.