Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிபர் ஒபாமா உறுதி: கல்விக்கான நிதி ஒதுக்கீடு

“கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க முடியாது’ என, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது:பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில், 20 சதவீதம் குறைக்கும் படி எதிர்க்கட்சியினர் வற்புறுத்துகின்றனர். கல்வியில் இந்தியா, சீனா போன்ற நாடுகள் முன்னேறியுள்ளன. அந்த நாடுகள், கல்விக்கான ஒதுக்கீட்டை குறைப்பதில்லை.நாம் கல்வியில் உலகத்தில் முதலிடத்தை வகிக்க வேண்டும். இரண்டாம் இடத்துக்கு சென்று விடக்கூடாது. எனவே, கல்வி ஒதுக்கீட்டு நிதியை குறைக்க முடியாது. இதனால், புதிய கல்லூரிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளோம்.அதே போல மாணவர்களுக்கும் கல்வி கட்டண சலுகை அளித்துள்ளோம். சிறு தொழில் செய்பவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அவுட்சோர்சிங் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கிடையாது.இவ்வாறு ஒபாமா பேசினார்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: