மனத்தை ஒருவன் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவன் அடையும் சந்தோஷம் இருக்கிறது.
- உண்மையான சந்தோஷம் என்பது நம்முள்ளே இருக்கும் ஒரு தன்மையால், வாழ்வைப் பற்றிய ஒரு சிந்தனையால் ஏற்படுகிறது. திருப்திக்கான வழிமுறைகள் நம்மிடையே இல்லாவிட்டால், பொருளாதார வெற்றிகள் முதல் எவ்வளவு வெற்றிகள் இருந்தாலும் அது நம்மை மகிழ்விக்காது.
- எதையாவது செய்வது, எதையாவது நேசிப்பது, எதையாவது நம்புவது இவைதான் வாழ்வில் சந்தோஷத்திற்கான அடிப்படைத் தேவைகள்.
- எவ்வளவு முறை தோல்வி பெற்றாலும் நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள். ஒரு காரியத்தை நன்கு செய்ததே அதன் வெகுமதிதான்.
- சந்தோஷம் என்பது பெரும்பாலும் கடும் உழைப்பால் ஏற்படுகிறது. வெறும் சிந்தனை, உணர்வு அல்லது உணர்ச்சியை அப்படியே சந்தோஷமாக அனுபவித்துவிடலாம் என்று கற்பனை செய்வது சிலர் செய்யும் தவறாகும். அழகை அருந்தமுடியுமா! சந்தோஷத்தை போராடிப் பெற வேண்டும். அது, மனிதர் வேலை செய்வதை விரும்புகிறது.
- தன்னிடம் இல்லாததற்காக வருந்தாமல், தன்னிடம் இருப்பதற்காக சந்தோஷமாக இருப்பவனே புத்திசாலியான மனிதன்.
- ஒவ்வொரு தலைமுறையும் பழமை தனக்குத் தந்த புதையலை சந்தோஷமாக அனுபவிக்கிறது. பிறகு புதிய சொத்துக்களை அப்புதையலில் சேர்த்துப் பெரிதாக்கி எதிர்காலத் தலைமுறைக்கு வழங்குகிறது.
நன்றி: கொல்லிமலைச்சாரல் ஆனந்த் பிரசாத்
முற்றிலும் சரி .எனது வலைப்பதிவு www .ramanan50 .wordpress .com , Happiness தலைப்பில் பார்க்கவும் .
Reblogged this on Gr8fullsoul.