கர்நாடக மாநில ஆளுநர் பரத்வாஜை மாற்றவேண்டும் என்ற பாரதீய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
“கர்நாடக மாநிலத்தில் கவர்னர் மேற்கொண்ட நடவடிக்கை சரியா தவறா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரியில்லை என ஆளுநர் கருதினால், அதனை தெரிவிக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு. ஆளுநரை மாற்றுவது, திரும்ப பெறுவது அரசியல் பூர்வமான நடவடிக்கை. அரசியல் கட்சிகள் விருப்பத்திற்கு ஏற்ப இதை மாற்றிக்கொள்ள முடியாது.”
இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.