Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பா.ஜ., பிரமுகர் வீட்டில் ரெய்டு: காமன்வெல்த் ஊழல்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடுகள் கான்ட்ராக்ட் பெற்றதில் நடந்த முறைகேடு தொடர்பாக பா.ஜ., முக்கிய பிரமுகர் சுதான்சு மிட்டல் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். சுதான்சு மிட்டலும் அவரது உறவினர் வினய் மிட்டலும், காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகள் கான்ட்ராக்ட் பெற்றதில் முறைகேடு செய்திருப்பதாகவும், அதன் தொடர்பாக ரெய்டு நடத்துவதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  போட்டி அமைப்புக் குழுவிடம் அவர் செய்த ஒப்பந்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவரது வங்கி கணக்குகளும் சோதிக்கப்பட்டது.
25 இடங்களில் ரெய்டு : தலைநகர் டில்லி மற்றும் புறநகர் டில்லியில் மேலும் 25 இடங்களில் ரெய்டு நடந்தது. சோதனை நடத்தப்பட்ட 25 இடங்களில் பெரும்பாலானவை ஒப்பந்தக்காரர்களின் அலுவலகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

thanks dinamalar

 

Leave a Reply