கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொள்ளவுள்ளனர். அபுதாபி நேஷனல் தியேட்டரில் அக்டோபர் 15ம் தேதி மானாட மயிலாட சீசன் 5-ன் பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் சீசன் 5-ன் ஜட்ஜ்களான குஷ்பு, நமிதா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குநர் கலா மாஸ்டர், தொகுப்பாளர்கள் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக நயன்தாராவும், பிரபுதேவாவும் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் ஜோடிகள் பயஸ்-வர்ஷா, பாலா-ஸ்வேதா, ரஹ்மான்-ஷிவானி, கிரண்-லீலாவதி, அஜார்-ஜெனிபர் ஆகியோரும், தமிழ், கோகுல் ஆகியோரும் பங்கு பெறுகின்றனர். டிக்கெட் கட்டணமாக 30 திர்ஹாம் முதல் 150 திர்ஹாம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Thanks Dinamalar