அயோத்தி நிலப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காண்பதை காங்கிரஸ் வரவேற்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
கட்சியின் மாத இதழான ‘காங்கிரஸ் சந்தேஷ்’-ல் கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அயோத்தி நில விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் மதிப்பளிக்கிறது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதித் தீர்ப்பு வரும்வரை அமைதியுடன் காத்திருக்க வேண்டும். எனினும், இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித் தீர்வு காண்பதை காங்கிரஸ் கட்சி முழுமனதோடு வரவேற்கிறது.
அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்லை. 1992 டிசம்பர் 6இல் நடைபெற்ற அந்த சம்பவம் வெட்ககேடான குற்றவியல் நடவடிக்கை. இதில் தொடர்புடையவர்கள் நிச்சயம் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்.
அலாகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் மனப்பக்குவத்தோடு ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
நீண்டகால பேச்சுவார்த்தை, திடமான கொள்கைகள் மூலம் ஜம்மு காஷ்மீர் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்புகிறேன். மத்திய அரசு செப்டம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்புகள் அந்த மாநிலத்தில் அமைதிக்கு பாதை அமைத்து தரும்.
காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
thanks webdunia
A very usefull post – A big thank you I hope you dont mind me writting about this article on my blog I will also leave a linkback Thanks