Monday, June 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நபிகள் நாயகம் சொல்வதைக் கேளுங்க பெண்களே!

  • ஈமான் கொண்ட மனிதனுக்கு அல்லாஹ்வின் பயத்துக்குப்பின் கிடைக்கும் பெரும்பாக்கியம் நல்ல மனைவியாகும். அவளை கணவன் ஏவினால் கட்டுப்படுவாள். அவன் அவளைப் பார்த்தால் மகிழ்ச்சியூட்டுவாள். கட்டளையிட்டால் அதை நிறைவேற்றுவாள். அவன் அவளை விட்டு வெளியேறினால் தன் கற்பையும் கணவன் உடமைகளையும் பாதுகாப்பாள்.
  • எந்த ஒரு மனைவி தன் கணவன் முன், முகத்தில் (கோபக்குறியைக் காட்டி) கடு கடுக்கப் பேசுவாளோ, அவள் நாளை கியாம நாளில் கருகருத்த முகத்துடன் வருவாள்.
    *”பெண்களே! நீங்கள் தருமம் செய்து வாருங்கள். அதிகமாக இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக நரகத்தில் பெண்களை அதிகமாக பார்த்தேன்’ என்று திருநபி (ஸல்) அவர்கள் கூறிய போது, பெண்களில் சிலர் “காரணம் என்ன?’ என்று வினவினர். அதற்கு திருநபி (ஸல்) அவர்கள் “நீங்கள் கணவன் மார்களை அசிங்கமாக திட்டுகிறீர்கள், அவர்களுக்கு நன்றி கெட்டதனமாக நடந்து கொள்கிறீர்கள்! மார்க்க அறிவு குறைந்தவர்களாகக் காணப்படுகிறீர்கள். உங்களில் அறிவாளிகளைக் காண முடியவில்லை’ என்று கூறினார்கள்.
  • பெண்களே! உங்களுடைய சொர்க்கம் நரகம் உங்கள் கணவர்களுடைய பிரியத்தைப் பொறுத்தே இருக்கிறது.
  • தனது கணவனை மோசடி செய்து வாழ்க்கை நடத்தும் பெண், இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவள் அல்ல!
  • கணவனுக்கு நன்றி செலுத்த வேண்டிய பெண், நன்றி செலுத்தாமல் வாழ்வாளேயானால் கியாம நாளில் இறைவன் அவளைக் கண் கொண்டு பார்க்கமாட்டான்.
  • “ஒரு பெண் வயதுக்கு வந்துவிட்டால் (முகத்தையும் உள்ளங்கைகளையும் திருநபி (ஸல்) அவர்கள் (காட்டி) இவைகளைத் தவிர ஒரு பெண் தன் மேனியின் எதனையுமே அன்னியவனிடம் காட்டுவதற்கு உரிமை இல்லை’ என்றார்கள்.
  • பெண் மறைமுகமாக இருக்க வேண்டியவள். அவள் வெளியே வருவதை எதிர் நோக்கி ஷைத்தான் (அவள் வீட்டு வாசலில்) நின்று கொண்டிருக்கிறான். ஆனால் வீட்டில் இருப்பவள், இறைவன் கருணையை நெருங்கியவளாக இருக்கிறாள்.
  • எந்தப் பெண்ணாவது தன் கணவனுக்கு அல்லாமல் அன்னியருக்காக வாசனை பூசிக் கொள்வாளேயானால், நிச்சயமாக அச்செயல் அறிவற்றதாகும். அது நரகத்தின் நெருப்பாகும்.
  • தலையில் முக்காடு இல்லாமல் (உடலை மறைத்துக் கொள்ளாமல்) வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண் ஷைத்தானின் முகத்தைக் கொண்டு செல்கிறாள். அவள் வீட்டுக்குத் திரும்பி வரும் போது ஷைத்தான் முகத்தைக் கொண்டு வருகிறாள்.
  • மெல்லிய ஆடை அணிந்து வந்த ஒரு பெண்ணைப் பார்த்த திருநபி (ஸல்) “உன்னை முழுமையாக்கிக் கொள்! நிர்வாணமாக நடக்காதே!’ என்று கூறினார்கள்.
  • ஒரு மனைவிக்குரிய செல்வத்தை எல்லாம் அவள் கணவன் செலவு செய்து அழித்துவிடுவானாயின் அதற்காக அவள் தன் கணவனைப் பார்த்து “என் செல்வத்தை எல்லாம் அழித்துவிட்டாயே!’ என்று (கடிந்து) சொல்வாளேயானால், அவள் நாற்பது ஆண்டு காலம் செய்த நன்மைகள் அழிக்கப்பட்டு விடும்.
  • எந்தப் பெண்ணும் சரி ஐங்காலமும் தொழுது ரமலான் மாதம் நோன்பும் நோற்று தன்னை எந்த கெட்ட செயலிலும் ஈடுபடுத்தாமல், கணவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடந்தால் அவள் விரும்புகின்ற சொர்க்கத்தில் நுழைவாள்.
  • வேடிக்கை பார்ப்பதற்காக ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறுவாளேயானால் அவளுடைய பெண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விபரீதமும் ஏற்பட்டு விடுகிறது.

Thanks Dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: