தொலைக்காட்சி வரலாற்றில் புதுமையையும் புரட்சியையும் உண்டாக்கிய விஜய் டிவியில்
சமீபத்தில் நிறைவடைந்த அழகிய தமிழ்மகன் நல்ல சொதப்பல் நிகழ்ச்சியாக உருவெடுத்தது ஏனோ தெரியவில்லை. நீயா நானா, நடந்தது என்ன போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர்களின் அழகிய தமிழ் உச்சரிப்பும், தமிழ் பேச்சு என்ற நிகழ்ச்சிகளின் வாயிலாக பங்கேற்பாளர்களை தமிழில் பேசவைத்ததோடு அல்லாமல் நேயர்களையும் தமிழ் மீது பற்றுதலை உண்டாக்கியது. ஆனால் இன்றோ அழகிய தமிழ்மகன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. தமிழகத்தின் தலைசிறந்த ஆண்மகன் யார் என்ற கேள்வியுடன் ஆரம்பித்தது இந்நிகழ்ச்சி. நிகழ்சசி முழுவதும் வேண்டாம் குறைந்தபட்சம் நிகழ்ச்சி இறுதிச்சுற்றிலாவது தமிழில் தொகுத்திருந்து பங்கேற்பாளர்களையும் தமிழில் பேசவைத்திருக்கலாம். அழகிய தமிழ் மகன் என்ற அழகிய தமிழில் தலைப்பை வைத்துக்கொண்டு கலவைத்தமிழில் பேசியது நகைப்பை வரவழைத்தது. இதற்கு பதிலாக அழகிய தமிழ் மகன் என்ற தமிழ் தலைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது தலைப்பை வைத்து நிகழ்ச்சி நடத்தியிருக்கலாம். இனியாவது விஜய் டிவி இதுபோன்ற சொதப்பல்களை செய்ய வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
விதை2விருட்சம் குழுவினர்