Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு: ஸ்வீட் மில்கி ப்ரெட்

ஸ்வீட் மில்கி ப்ரெட் இரண்டு நிமிடத்தில் தயார்

தேவையானவை: –
ரொட்டி – 1
பால் – 200 மிலி.
சர்க்கரை – 5 டீஸ்பூன் (தேவைக்கும் சுவைக்கும் ஏற்ற‍வறு)
முட்டை – 2
சிறிதளவு மஞ்சள்தூள்
ஏலக்காய் – 4
மிளகுத்தூள் சிறிதளவு
நெய் தேவையான அளவு

செய்முறை:

பாலை நன்கு காய்ச்சி எடுத்துபின் சர்க்க‍ரை, முட்டை, ஏலக்காய் பொடித்தது, மஞ்சள் தூள், மிளகுத்தூள் ஆகியவைகளை பாலுடன் சேர்த்து கலந்து கொள்ள‍வும். பின்ன‍ர் அதில் ஒரு ரொட்டித் துண்டை நனைத்து எடுத்து (அதிக நேரம் பாலில் ரொட்டித்துண்டை ஊறவிடக்கூடாது)இதனிடையில் ஸ்டவ்வை பற்ற‍ வைத்து தோசை கல்லை வைக்க‍வும். தோசைக்க‌ல் காய்ந்தவுடன் சிறிதளவு நெய்விடவும். மேலே கூறியபடி தயார்நிலையில் வைத்துள்ள‍ ரொட்டித் துண்டை சப்பாத்தி சுடடு எடுப்ப‍து போல் இரு புறமும் சிவக்க‍ வெந்தவுடன் எடுத்து சுடச்சுட சாப்பிடவேண்டியதுதான்.

குறிப்பு
இது வளரும் குழந்தைகளுக்கு மிகுந்த சத்தானதும் நொடியில் தயாரிக்கும் உணவாகும்.

திருமதி கமலா
விதை2விருட்சம்

Leave a Reply