Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீனா முடிவு

நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி 500 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் மூத்த இன்ஜினியர் ஹி ஹூவாவூ வூகான் நகரத்தில் பேசிய தாவது:தற்போது மணிக்கு 380 கி.மீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.புதிய தொழில் நுட்பத் தின் அடிப்படையில் ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.மேலும்7ஆயிரத்து 55 கி.மீ தூரத்திற்கு துரித ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது உலகிலேயே மிக நீளமான துரித ரயில் பாதையாகும். அதனை 2012-ம் ஆண்டிற்குள் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிக்கும் திட்டம் உள்ளது.உலகிலேயே வேகமான ரயில் சேவை அளிப்பது தான் குறிக்கோளாகும்.என அவர் கூறினார்.சீனா வில் தயாரிக்கப்பட்ட சிஆர்எச் 380ஏ வகை ரயில் 416.6 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த ரயில் கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளோட்டம் விடப்பட்டது. இது தான் தற்போது உலகிலேயே வேகமாக செல்லக்கூடிய ரயிலாக உள்ளது.

Thanks Dinamalar

Leave a Reply