Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லேட்டஸ்ட் தகவல்! நித்தியானந்தா கேமரா!

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் உல்லாசமாக இருந்த வீடியோ சர்ச்சை உருவாகி பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும் நித்தியானந்தா தொடர்பான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேதான் இருக்கிறது. அதிலும் நித்தியானந்தா விவகாரத்தில் சினிமா நடிகை ஒருவர் சிக்கியிருப்பதாலோ என்னவோ, சினிமாக்காரர்கள் நித்தியானந்தாவை மறக்க மறுக்கிறார்கள்.

டைரக்டர் கரு.பழனியப்பன் இயக்கி, நாயகனாக நடிக்கும் மந்திர புன்னகை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை மீனாட்சி படுகவர்ச்சியாக வந்திருந்ததையும், அதனை பார்த்து பார்த்திபன் அடித்த கால்ஷீட் கமெண்ட்டையும் நேற்றே‌ சொல்லியிருந்தோம். விழாவினைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஒளிப்பதிவாளர் ராம்நாத் ஷெட்டி, தனது கேமராவுக்கு நித்தியானந்தா என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவித்தார்.

படத்தின் சூட்டிங்கிற்கு பயன்படுத்த ஒரு ஸ்டடிக்கேம் கேமிராவை பயன்படுத்த நினைத்திருக்கிறார் ராம்நாத். கேமிரா இருக்க வேண்டும். அதே நேரத்தில் அது மற்றவர்கள் பார்வையில் படாத அளவுக்கு சிறியதாகவும் இருக்க வேண்டும். இதுதான் ஒளிப்பதிவாளரின் எதிர்பார்ப்பு. ஏனென்றால் பரபரப்பான சிட்டியில் ஹீரோவை பல இடங்களில் நடக்க வைத்து சூட் பண்ண வேண்டும். படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்தாலே கூட்டம் கூடி யதார்த்தம் கெட்டு விடும். அதற்கேற்றார் போல மும்பையில் ஒரு கேமிரா இருந்தது. ஆனால் அதை இங்கு கொண்டு வர ஏகப்பட்ட தடைகள். காரணம் ரொம்ப பிசியாக இருந்த அந்த கேமிரா, இங்கு வரவழைக்கப்பட வேண்டும் என்றால் முன்கூட்டியே புக் பண்ண வேண்டும். திடீரென்று அது கிடைக்காமல் போனால் சூட்டிங்கே தடை படும். வேறென்ன செய்வது என்று யோசித்தவர்கள் அலைந்து திரிந்து சென்னையிலேயே அதுபோல ஒரு கேமிராவை கண்டு பிடித்தார்களாம். “நாங்க அதை செல்லமா நித்தியானந்தா கேமிரான்னு சொல்வோம். அந்தளவுக்கு கம்ஃபர்ட்” என்கிறார் ராம்நாத் ஷெட்டி.

thanks Dinamalar

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: