சென்னையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததாக கூறி இளைஞர் காங்கிரசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோடம்பாக்கம் மலர் ஹவுசில் இருந்து அசோக்பில்லர் செல்லும் சாலை அருகே ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை இருக்கிறது. நேற்றிரவு யாரோ இந்த சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமரியாதை செய்துள்ளனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் உள்பட ஏராளமான காங்கிரசார் ராஜீவ் காந்தி சிலை அருகே இன்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காங்கிரசாரை சமாதானப்படுத்தி மறியல் கைவிடச் செய்தனர்.
thanks webdunia