Friday, July 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கோவா ஒருநாள் போ‌ட்டி மழையால் தாமதம்

இந்திய-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையே கோவாவில் இன்று நடைபெறவு‌ள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தாமதமாகத் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணிக்குத் துவங்க வேண்டிய இந்தப் போட்டி, நேற்று பெய்த பலத்த மழை காரணமாக குறிப்பிட்ட நேரத்திற்கு துவங்க முடியாத அளவிற்கு மைதானம் உள்ளதாக நடுவர்கள் கருதுகின்றனர்.

11 மணிக்கு மீண்டும் ஒருமுறை மைதானத்தை ஆய்வு செய்துவிட்டு போட்டி துவக்கம் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 3வது ஒரு நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டால், இந்த ஒரு நாள் தொடரை இந்திய அணி வென்றுவிடும். போட்டி நடந்து ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றால்தான் இத்தொடரை ஆஸ்ட்ரேலியாவால் சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
thanks webdunia

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: