டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் புதுமுகம் மகேஷ் – நடிகை அஞ்சலி நடித்த அங்காடித் தெரு படம் தமிழில் மெகா ஹிட் ஆனதைத் தொடர்ந்து தெலுங்கிலும் அந்த படம் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால் என்ற பெயரில் தெலுங்கில் உருவாகியிருக்கும் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு ஷாப்பிங் மால் வெற்றி பெற வாழ்த்தினார்கள். மெகா ஸ்டார் சிரஞ்சிவி இசையை வெளியிட்டு பேசினார். நிகழ்சியில் தயாரிப்பாளர் அருண்பாண்டியன், டைரக்டர் வசந்தபாலன், நாயகன் மகேஷ், நாயகி அஞ்சலி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஷாப்பிங் மால் படம் வருகிற 28ம்தேதி ரீலிஸ் ஆகிறது. தமிழைப் போலவே தெலுங்கிலும் இப்படம் வெற்றி பெரும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் டைரக்டர் வசந்தபாலன். thanks dinamalar