Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பஞ்சாப் சிந்து வங்கியில் புரோபேஷனரி அதிகாரி பணி அறிவிப்பு

பொதுத் துறை வங்கிகளில் மிகவும் முக்கியமான வங்கியான பஞ்சாப் சிந்து வங்கி தரமான சேவைக்குப் பெயர் பெற்றது. இந்த வங்கியில் 440 புரோபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வித் தகுதி : பஞ்சாப் சிந்து வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.சி., பிரிவினர் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
இது தவிர கம்ப்யூட்டருடன் தொடர்புடைய டிப்ளமோ படிப்பை என்.ஐ.ஐ.டி., எஸ்.எஸ்.ஐ., ஆப்டெக், சி.எம்.சி., போன்ற பிரசித்தி பெற்ற கல்வி நிறுவனங்களின் மூலமோ அல்லது அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டி.ஓ.இ.ஏ.சி.சி., படிப்போ அல்லது ஓ/ஏ/பீ/சி சான்றிதழ் படிப்பையோ முடித்திருக்க வேண்டும். அல்லது பட்டப் படிப்பு அளவிலான படிப்பில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். முழு விபரங்களை அறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
வயது வரம்பு : பஞ்சாப் சிந்து வங்கியின் புரோபேஷனரி அதிகாரி
பதவிக்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : பஞ்சாப் சிந்து வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி முறை இருக்கும்.
எழுத்துத் தேர்வு அப்ஜெக்டிவ் வகையிலானது. இந்தத் தேர்வில் டெஸ்ட் ஆப் ரீசனிங், குவாண்டிடேடிவ் ஆப்டியூட், ஜெனரல் அவேர்னஸ், கம்ப்யூட்டர் நாலெட்ஜ், இங்கிலீஷ் லாங்குவேஜ் ஆகிய பகுதிகள் இருக்கும். இதன் தொடர்ச்சியாக டெஸ்கிரிப்டிவ் வகையிலான தேர்வும் உண்டு. எழுத்துத் தேர்வு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மையங்களில் 16.01.2011 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : பஞ்சாப் சிந்து வங்கியின் புரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.400/- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.50/- மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தக் கட்டணத்தை டி.டி., அல்லது பே ஆர்டராக “Punjab & Sind Bank & Recruitment Project 2011 & 12 Probationary Officers” என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். டி.டி., யின் பின் பகுதியில் பெயர், முகவரி, விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், எழுத்துத் தேர்வு மையம் ஆகியவற்றைத் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி ? :
பஞ்சாப் சிந்து வங்கியின் புரோபேஷனரி அதிகாரிப் பதவிக்கு விண்ணப்பிக்க முதலில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைன் முறையில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள இ-மெயில் முகவரி இருப்பதை முதலில் உறுதி செய்யவும். விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரிண்ட் அவுட்டை சாதாரண தபாலில் மட்டுமே பின் வரும் முகவரிக்கு 15.11.2010க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
முகவரி
Post Bag No.7640,
Malad West,
Mumbai 400 064.
முக்கிய தேதிகள் :
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 08.11.2010
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 16.01.2011
விண்ணப்பப் படிவங்கள் தபாலில் சென்றடைய இறுதி நாள் : 15.11.2010
இணைய தள முகவரி :
” www.psbindia.com ”
Thanks Dinamalar

Leave a Reply